Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக் கோப்பையில் கோலி, ரோஹித், ஸ்மித், ரூட் ஆகியோரை ‘மன்கடிங்’ செய்தால் என்ன ஆகும்?- அஸ்வின் ருசிகரம்!

மன்கடிங் செய்வது சரிதான் என்று வாதிடுபவர் அஸ்வின். இதை நியாயப்படுத்த அவர் கூறும் காரணங்களும் நியாயமானதே. கடைசி பந்து ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்னும் போது அந்த ஒரு ரன்னை எடுக்க ஒருவர் முன் கூட்டியே ரன்னர் முனை கிரீசைக் கடந்து முன்னேறினால் அது நியாயமா அப்போது அவரை மன்கடிங் செய்தால் அது தவறா? என்கிறார். கரெக்ட்தான். டி20 என்ற வணிக மயமான கிரிக்கெட் வளர்ச்சி கண்ட பிறகே எப்படியாவது வென்றேயாக வேண்டும் என்ற மனநிலை பேட்டருக்குச் சாதகமாகச் செயல்படும் போது மன்கடிங் நியாயம்தானே என்கிறார் அஸ்வின். நியாயம்தானே!

மீண்டும் ஏன் இந்த மன்கடிங் விவாதம் எழுந்ததென்றால். சமீபத்தில் முடிந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரின் 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷதாப் கானை மன்கடிங் செய்தார் ஆப்கான் பவுலர் ஃபாசல்ஹக் பரூக்கி. இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கிரீசை விட்டு ஷதாப் கான் முன்னேறிச் சென்றது உண்மைதான். அதனால் அவர் மன்கடிங் செய்யப்பட்டார் இதுவும் சரியே. ஆனால் பாகிஸ்தான் தோற்கவில்லை, நசீம் ஷா வந்து வெற்றி பெறச் செய்து ஹீரோவானார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்