பானிபட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளார் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இந்த சாதனையை இந்தியா மற்றும் அவரது சொந்த கிராமத்தின் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. இறுதிப் போட்டியில் இரண்டாவது முயற்சி முதல் கடைசி முயற்சி வரையில் அவர் தான் பட்டியலில் முதலிடத்தில் நீடித்தார். அதன் மூலம் தங்கம் வென்றார்.
0 கருத்துகள்