டாப் 5-6 வீரர்கள் ஆடி ஒரு நாள் போட்டியை வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களால் முடியாத அசாதாரணச் சூழல்களில் மட்டுமே கீழ் வரிசை குறிப்பாக நம்பர் 8 வீரர் பேட்டிங்கில் ஆட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படலாம். ஆனால் டாப் வீரர்கள் அல்லது சூப்பர் ஸ்டார்கள் எனப்படுவோர்கள் தங்கள் நினைத்தால் ஆடலாம் இல்லையென்றால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்கும் போது நம்பர் 8-ல் ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்றும் அப்போது அணியில் பேட்டிங்கும் செய்யக்கூடிய ஷர்துல்ல் தாக்கூரை வைத்துக் கொள்வதா, இல்லை டாப்பவுலரான ஷமியை தூக்கி விடுவதா என்று கிரிக்கெட் விவாத அரங்கில் எழுந்த போலி பட்டிமன்றத்திற்கு நேற்று ஷமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஷமி, பும்ரா சேர்க்கைதான் உலக அணிகளுக்குப் பெரிய அச்சுறுத்தல். ஷமி நேற்று இந்திய அணியை கடந்த சுற்றில் காலி செய்த மிட்செல் மார்ஷிற்கு அருமையான ஒரு ஓவரில் அவுட் ஸ்விங்கர் பந்தை வீசி ஸ்லிப் கேட்ச் ஆக வைத்தார். பிறகு ஸ்டீவ் ஸ்மித் அருமையாக ஆடிக்கொண்டிருந்த போது ஒரு அபாரமான இன்ஸ்விங்கரை வீசி பவுல்டு எடுத்தார். பிறகு ஸ்டாய்னிஸ், ஷார்ட், ஷான் அபாட் ஆகியோரையும் துல்லியமான பந்தில் வீழ்த்தி தன் கரியர் பெஸ்ட் பவுலிங்காக 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
0 கருத்துகள்