தரம்சலா அழகான இயற்கைப் பசுமைப் பின்னணியில் மலைவாசஸ்தலமாக விளங்கும் இடமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர்கள் மேலே உள்ளது தரம்சலா. ஆகவே, இங்கு பந்துகளை அடித்தால் பறக்கும். ஆனால், இப்போது எழுந்துள்ள சர்ச்சை அவுட் ஃபீல்டில் புல்வெளி சமச்சீராக இல்லாமல் இடைவெளி நிரம்பியதாகவும், அவுட் ஃபீல்டில் பல இடங்கள் பாசி பிடித்து பீல்டர்களுக்கு அபாயகரமானதாகவும் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இங்கிலாந்து வீரருமான ஜானதன் ட்ராட் சனிக்கிழமை ஆப்கன் பீல்டர் முஜிபுர் ரஹ்மான் புல்லற்ற மண் அடர்ந்த அவுட்ஃபீல்டில் டைவ் அடித்து பீல்ட் செய்ய முயற்சித்தபோது இடது முழங்கால் மண்ணுக்குள் புதைந்ததாக புகார் தெரிவித்துள்ளார். நல்ல வேளையாக அவர் காயமடையவில்லை. ஆனால், ஆர்வமிக்க பீல்டர்கள் அவுட் ஃபீல்டின் தன்மை தெரியாமல் சாகசம் செய்ய நினைத்தால் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையையே காலி செய்து விடும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 கருத்துகள்