Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முகமது ஷமி, வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜுனா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி: விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர்கள், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான மேஜர் தயான் சந்த் விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. இந்த வகையில் 2023-ம் ஆண்டு விருதுக்கான பட்டியல் கடந்த டிசம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்றது. விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு பாட்மிண்டன் வீரர்களான ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் பாட்மிண்டன் தொடரில் பங்ககேற்றுள்ளதால் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்