சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. எனினும், அதிக ரன்கள் அடித்த வீரர்களின் டாப் 5 பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலியே முதலிடம் பிடித்துள்ளார். வழக்கத்துக்கு மாறாக இந்த ஐபிஎல் ரன்கள் அதிகம் குவிக்கும் தொடராக அமைந்தது. பல போட்டிகளில் 200-ஐ தாண்டியே ஸ்கோர்கள், சில போட்டிகளில் 250+ என்பது சர்வசாதாரணமாக கடந்தது. இதனால், பேட்டர்களுக்கு இந்த சீசன் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ரன் வேட்டையில் டாப் 5 வீரர்கள்:
1) விராட் கோலி: நடப்பு சீசனில் ஆரஞ்சு தொப்பி வின்னர் விராட் கோலி தான். இந்த தொடரில் 15 இன்னிங்ஸ்களில் சராசரி 61.75, ஸ்ட்ரைக் ரேட் 154 உடன் 741 ரன்கள் குவித்து டாப் ரன் ஸ்கோரர் ஆனார். இதில் ஒரு சதம், ஐந்து அரைசதங்கள் அடக்கம். அதிகபட்ச ஸ்கோர் 113.
0 கருத்துகள்