லக்னோ: பெண்களின் பாதுகாப்புக்கு எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தர பிரதேச மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்புக்கு கடந்த 20 ஆண்டுகளில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்சியில் எஸ்ஓஎஸ் பட்டன் என ஏராளமான பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புதுமை கண்டுபிடிப்பாக பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய செருப்பை பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளியில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ்வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை தயாரித்துள்ளனர்.
0 கருத்துகள்