Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சஞ்சு சாம்சனுக்கு விரலில் எலும்பு முறிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், 6 வாரங்கள் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியின் போது சஞ்சு சாம்சனுக்கு ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சாம்சனின் கை விரலை தாக்கியது. ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காயம் குணமடைய 6 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்