Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“தனித்துவமான ஆட்டம்” - இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இது ஒரு தனித்துவமான ஆட்டம் மற்றும் தனித்துவமான முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை நம் நாட்டுக்கு கொண்டு வந்த நமது கிரிக்கெட் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். போட்டி முழுவதும் அற்புதமாக விளையாடியுள்ளனர். அற்புதமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய நம் அணிக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்