அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாகும்.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. எனினும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றை முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்வதில் தீவிரம் காட்டக்கூடும்.
0 கருத்துகள்