லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 138 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அபாரமாக செயல்பட்டு 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, மார்கோ யான்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
0 கருத்துகள்