அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-ல் புதன்கிழமை அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் - ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்திருந்தது.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அனிர்பர்கோஷ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திராவுடன் மோதினார். இதில் இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திரா 2-1 (11-8, 11-9, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
0 கருத்துகள்