லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி நிதானமாக விளையாடி 364 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம் விளாசினர்.
லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் குவித்தன. 6 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது.
0 கருத்துகள்