அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் தகுதி சுற்று 2-ல் இன்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வரும் 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபியுடன் பட்டம் வெல்வதற்கு மோதும்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தகுதி சுற்று 1 ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சரிவை சந்தித்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. முக்கியமான இநத் ஆட்டத்தில் முஷிர் கான் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
0 கருத்துகள்