Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகளிர் கிரிக்கெட் முன்னேற பாடுபட்டவர்களுக்காக உலக கோப்பையை வெல்ல நாங்கள் விரும்புகிறோம்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

கொழும்பு: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் இலங்​கை​யின் கொழும்பு நகரில் இந்​தி​யா, பாகிஸ்​தான் மகளிர் அணி​கள் மோதிய லீக் ஆட்​டம் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய மகளிர் அணி 50 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹர்​லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிர​திகா ராவல் 31 ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 32 ரன்​கள் சேர்த்​தனர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் டயானா பெய்க் 4 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார்.

இதைத் தொடர்ந்து 248 ரன்​கள் என்ற இலக்​குடன் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 43 ஓவர்​களில் 159 ரன்​களுக்கு சுருண்​டது. அதி​கபட்​ச​மாக சித்ரா அமின் 81, நடா​லியா பெர்​வைஷ் 33, சித்ரா நவாஷ் 14 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற எந்த வீராங்​க​னை​யும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. இந்​திய அணி தரப்​பில் கிரந்தி கவுட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 88 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்