Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு

லீட்ஸ்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டுள்​ளது. இரு அணி​கள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்​டிங்​லி​யில் உள்ள லீட்ஸ் மைதானத்​தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

இந்​திய அணி​யின் இடது கை பேட்​ஸ்​மே​னான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்​சன் அறி​முக வீரராக இடம் பெற்​றார். இதே​போன்று 8 வருடங்​களுக்கு பிறகு கருண் நாயரும் அணிக்கு திரும்​பி​னார். வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக ஷர்​துல் தாக்​குரும், சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக ரவீந்​திர ஜடேஜா​வும் இடம் பெற்​றனர். வேகப்​பந்து வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்​கி​னார்​கள். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி நிதான​மான தொடக்​கம் கொடுத்​தது. இன்​ஸ்​விங், ஆஃப் ஸ்டெம்​பு​களுக்கு வெளியே வீசப்​பட்ட பந்​துகள், அவுட் ஸ்விங் என இங்​கிலாந்து வேகப்​பந்து வீச்​சாளர்​கள் தொடர்ச்​சி​யாக அழுத்​தம் கொடுக்க முயற்​சித்​தனர். ஆனால் ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி பொறுமை​யாக செயல்​பட்​டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்