Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி

காலே: இலங்கை - வங்​கதேசம் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி காலே நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 495 ரன்​கள் குவித்​தது. தொடர்ந்து விளை​யாடி இலங்கை அணி நேற்​றைய 4-வது நாள் ஆட்​டத்​தில் 131.2 ஓவர்​களில் 485 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது.

கமிந்து மெண்​டிஸ் 87, தனஞ்​ஜெயா டி சில்வா 19, குஷால் மெண்​டிஸ் 5, மிலன் ரத்​னாயகே 39, திரிந்து ரத்​னாயகே 0, அஷிதா பெர்​னாண்டோ 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். வங்கதேச அணி தரப்பில் நயிம் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 10 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 177 ரன்​கள் எடுத்​தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்