Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆதாரம் கேட்கிறது டிஎன்பிஎல் நிர்வாகம்

சேலம்: டிஎன்பிஎல் தொடரில் கடந்த 14-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 151 ரன்கள் இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் சார்பில் டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. பந்தை உலரச் செய்வதற்கு வழங்கப்படும் துண்டுகளில் வேதியல் திரவத்தை பயன்படுத்தி பந்து சேதப்படுத்தப்பட்டதாக அந்த அணி தரப்பில் கூறப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்