Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ்

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை இந்த சீசனில் சேர்த்து போட்டியை உறுதி செய்துள்ளது டபிள்யூடிஏ அமைப்பு.

250 புள்ளிளை கொண்ட இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள். அதேவேளையில் இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் களமிறங்கும். கடைசியாக 2022-ம் ஆண்டு சென்னையில் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின்லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்