Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

5 செஷன்கள் விளையாடுவது எளிதல்ல: சொல்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

மான்செஸ்டர்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டியை இந்​திய அணி அபார​மாக விளை​யாடி டிரா செய்​தது. 311 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடி இந்​திய அணி ரன் கணக்கை தொடங்​கும் முன்​னரே 2 விக்​கெட்​களை பறி​கொடுத்த போதி​லும் கேப்​டன் ஷுப்​மன் கில், கே.எல்​.​ராகுல் ஜோடி அபார​மாக விளை​யாடி 3-வது விக்​கெட்​டுக்கு 188 ரன்​கள் குவித்​தது.

ஷுப்​மன் கில் 103 ரன்​களும், கே.எல்​.​ராகுல் 90 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஜோடி மிக அற்​புத​மாக விளை​யாடி இங்​கிலாந்து அணிக்கு எந்த ஒரு வாய்ப்​பை​யும் கொடுக்​காமல் அந்த அணி வீரர்​களை களத்​தில் வெகு நேரம் பீல்​டிங் செய்ய வைத்து சோர்​வடையச் செய்​தது. இந்த ஜோடி 334 பந்​துகளை சந்​தித்து 203 ரன்​களை வேட்​டை​யாடியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்