Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகளிர் உலகக் கோப்பை செஸ்: இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்

பதுமி: ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​தார்.

ஜார்​ஜியா நாட்​டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் இறு​திப் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான 38 வயதான கோனேரு ஹம்​பி, சகநாட்​டைச் சேர்ந்த 19 வயதான சர்​வ​தேச மாஸ்​ட​ரான திவ்யா தேஷ்​முக்​குடன் மோதி​னார். இரண்டு கிளாசிக்​கல் ஆட்​ட​மும் டிரா​வில் முடிவடைந்​ததை தொடர்ந்து வெற்​றி​யாளரை தீர்​மானிப்​ப​தற்​கான டைபிரேக்​கர் ஆட்​டம் இன்று நடை​பெற்​றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்