லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 242 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.
லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 52, வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
0 கருத்துகள்