Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஸ்டார்க் ஓய்வு: டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்!

சிட்னி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

35 வயதான ஸ்டார்க், கடந்த 2012-ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் விளையாடி இருந்தார். மொத்தம் 65 போட்டிகளில் விளையாடி, 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருந்தார். இந்த சூழலில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்