துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறி உள்ளது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது இந்தியா.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. அந்த அணியின்
பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது சைப் ஹசன் ஆட்டம்தான். அவர் 51 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். பர்வேஸ், 21 ரன்கள் எடுத்தார்.
0 கருத்துகள்