சுவோன்: கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கொரியாவில் உள்ள சுவோன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், இந்தோனேஷியாவின் சிகோ அவுரா ட்வி வார்டோயோவுடன் மோதினார். இதில் பிரனாய் முதல் செட்டில் 5-8 என பின்தங்கிய நிலையில் இருந்த போது காயம் அடைந்தார்.
வலது விலா எலும்பு பகுதியில் காயம் அடைந்த அவர், சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினார். ஆனால் அவர், அசவுகரியமாக உணர்ந்ததால் போட்டியில் இருந்து விலகினார். அப்போது சிகோ அவுரா ட்வி வார்டோயோ 16-8 என முன்னிலையில் இருந்தார். பிரனாய் விலகியதால் சிகோ அவுரா ட்வி வார்டோயோ 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
0 கருத்துகள்