துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும்.
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று இரவு வங்கதேசத்துடன் மோதுகிறது. இரு அணிகளும் சர்வதேச டி 20-ல் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் வங்கதேச அணி ஒரே ஒரு முறை மட்டும் வெற்றி கண்டிருந்தது.
0 கருத்துகள்