துபாய்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்தவாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரை அகமதாபாத்தில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
0 கருத்துகள்