Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேசவ் மகாராஜ் அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ் அபாரமாக பந்து வீசி இருந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன. இன்று (செப்.2) ஒருநாள் தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்