Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிராஜ், பும்ரா அசத்தல் பந்து வீச்சு: மேற்கு இந்தியத் தீவுகள் 162 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

அகமதாபாத்: இந்​திய அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் முகமது சிராஜ், ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்​பந்து வீச்சை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த போட்​டி​யில் டாஸ் வென்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் கேப்​டன் ராஸ்​டன் சேஸ் பேட்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய அந்த அணிக்கு தொடக்க ஓவர்​களில் ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் வேகக்​கூட்​டணி கடும் அழுத்​தம் கொடுத்​தது. தொடக்க வீர​ரான டேக்​நரைன் சந்​தர்​பால் 11 பந்​துகளில் ரன் ஏதும் எடுக்​காமல் சிராஜ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் துருவ் ஜூரெலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்