புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 கருத்துகள்