துபாய்: 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெற்ற தொடர் போலவே இந்தத் தொடருக்கும் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட உள்ளன.
இந்தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்று விடும். எஞ்சிய அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றி பெறும் அடிப்படையில் தகுதி பெறும்.
0 கருத்துகள்