
கான்பெரா: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 25-ம் தேதி சிட்னியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக களமிறங்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகி உள்ளார். கழுத்து பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்