அக்ரா: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு 5-வது ஆப்பிரிக்க அணியாக கானா தகுதி பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் நேற்று முன்தினம் அக்ராவில் கானா - கொமொரோஸ் அணிகள் மோதின. இதில் கானா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் முகமது குடுஸ் 47-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
0 கருத்துகள்