Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று இந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் அந்த அணி 118.5 ஓவர்களில் 390 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 25 ரன்களும், சாய் சுதர்சன் 30 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்