Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழக தேர்தல் 2021: 72.78% வாக்குகள் பதிவு; தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வ அறிவிப்பு https://ift.tt/31PyETA

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையின்படி மொத்தமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகளும்,  குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% சதவீத வாக்குகளும்  பதிவாகியுள்ளது.

மற்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின் வாக்கு சதவீதம் பின்வறுமாறு:-

image

image

image

image

image

image

முன்னதாக, நேற்று தமிழக சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. சிறு சிறு பிரச்னைகளை தவிர்த்து பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, தமிழகத்தை பொறுத்தவரை காலை முதல் சீரான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.

காலை 9 மணி நிலவரப்படி அதாவது வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் 13.80 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதுவே 11 மணிக்கு 26.29 சதவீதமாகவும், 1 ஒரு மணி அளவில் 39.61 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகின. 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் 53.35 என்ற அளவை எட்டியது. மாலை 5 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 63.6 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.

இறுதியில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று கூறுயிருந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக இன்று தொகுதிகளின் வாக்குசதவீத விவரங்களை வெளியிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்