சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, “ சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளை கொண்ட கட்டுப்பாட்டு மையம் மீண்டும் செயல்படுகிறது. கொரோனா தொற்று குறித்த சந்தேகங்களை அறிந்துகொள்ள 044 46122300,044 25384520 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டு 2 லட்சம் அழைப்புகள் வந்தன.
அவதூறு பரப்பினார் கடுமையான நடவடிக்கை
கொரோனா தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் வழக்குப்பதிவு செய்யப்படும். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும். குறிப்பாக திருமண மண்டபம், துக்க நிகழ்வுகள், ஹோட்டலில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்