Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேற்குவங்கத்தில் பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்!

சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்க மாநிலத்தில் புதிதாக மும்முறை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் ஏற்கனவே இருமுறை மரபணு மாற்றமடைந்த வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு B.1.618 என பெயரிட்டுள்ள ஆய்வாளர்கள் மேற்குவங்க மாநிலத்தில் இதன் பரவல் அதிகரித்திருப்பதால் BENGAL STRAIN என்றும் அழைக்கின்றனர்.

மேற்குவங்கத்தில் அண்மைக்காலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இந்த மரபணு மாற்றமும் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கும் ஆய்வாளர்கள், தடுப்பூசியால் உடலில் உண்டான நோய் எதிர்ப்பாற்றலில் இருந்தும் அவை தப்பிப்பதாக தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்