தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் பிற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும், கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று மாலை கனமழை பெய்தது. அருமனை, களியல், கடையாலுமூடு, நெட்டா, ஆறுகாணி, பொன்மனை பத்துகாணி, திற்பரப்பு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது. பெரியகுளம் மற்றும் எ.புதுப்பட்டி. காமாட்சிபுரம். வடுகபட்டி சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமர் அரைமணி நேரத்த்கிற்கும் மேலாக மிதமான சாரல் மழை பெய்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்