Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை! https://ift.tt/3tp0l1Q

கொரோனா பரவல் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வழக்கு விசாரணையும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ப.தனபால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்