Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 11 நாள் போர் நிறுத்த உடன்படிக்கை

ஹமாஸின் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10ஆம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை பதிலடி தாக்குதல் நடத்தியது. ஒரு வாரத்திற்கும் மேலாக சண்டை நீடித்து வந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 260ஐ தாண்டியது.

image

சண்டையை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சித்து வந்தன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே எகிப்து நாடு மத்தியஸ்தம் செய்தது. மேலும் கத்தார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டன. இதன் பலனாக இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 11 நாள் போர் நிறுத்த ஒப்பந்தமானது இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஹமாஸின் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்