மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ (DRDO) அமைப்பும், தனியார் நிறுவனமான டாக்டர் ரெட்டீஸும் இணைந்து கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கிய 2டிஜி (2 DG) மருந்து இன்று முதல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு 10,000 பாக்கெட் 2 DG மருந்துகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கவுள்ளார்.
கொரோனாவுக்கு சிகிச்சை தர தற்போது பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டாலும் அவை முழுமையான பலன்களை தரவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO-வும், ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனமும் இணைந்து 2 DG என்ற பெயரில் தூள் வடிவிலான கொரோனா சிகிச்சைக்கான மருந்தை உருவாக்கியுள்ளன. கொரோனாவுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இம்மருந்தின்மீது மேற்கொள்ளப்பட்ட 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனைகளில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்ததை தொடர்ந்து அவசரகால தேவைக்கு பயன்படுத்த இவற்றுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
தூள் வடிவிலான இம்மருந்தை தண்ணீரில் கலக்கி குடிக்கும்போது குறைவான மற்றும் மிதமான தொற்று பாதிப்புள்ளவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்