Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பொது இடங்களில் ஆவிபிடிக்கும் முறைக்கு கிளம்பும் எதிர்ப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நியைத்தைத் தொடர்ந்து, மற்ற ரயில் நிலையங்களிலும் ஆவிபிடிக்கும் இயந்திரம் அமைக்கப்படும் என ரயில்வே காவல்துறை எஸ்பி பழனிகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முறைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, சென்ட்ரல் ரயில் நிலைய காவல்துறையினர் சார்பில் பயணிகள் நீராவி பிடிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10 ஆவிபிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் வேம்பு, துளசி, மஞ்சள், கற்பூரவள்ளி உள்ளிட்ட மூலிகைகள் மூலம் ஆவிபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ஆவிபிடித்த பிறகும் முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பயணிகளுக்கிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஆவிபிடிக்கும் இயந்திரம், படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் அமைக்கப்படும் என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆவி பிடிக்கும் இயந்திரத்தை பல்வேறு நபர்கள் பயன்படுத்தும்போது தொற்று பாதிப்பு ஏற்படவே அதிக வாய்ப்பிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீடுகளில் தனிநபர்கள் நீராவி பிடிப்பது சிறந்தது என்றும், பொது இடங்களில் இம்முறையை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த பிரதீப் கவுர், திமுக எம்பி செந்தில்குமார் உள்ளிட்டோர் பொது இடங்களில் நீராவி இயந்திர முறைக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்