Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா 2-வது அலைக்கு எதிராக தேசம் முழு வலிமையுடன் போராடுகிறது - பிரதமர் மோடி உரை

கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலையை தேசம் முழு வலிமையுடன் எதிர்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மன்கிபாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் உரை நிகழ்த்திய அவர், தமது 7 ஆண்டு கால ஆட்சியில் நாடு மிக வேகமாக முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக கூறினார். கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக தேசம் முழு வலிமையுடன் போரிட்டு வருவதாகவும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் புயல் சேதங்கள் திறம்பட தவிர்க்கப்பட்டு எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வழக்கமாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி 900 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவை 10 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டு 9 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

இரண்டாம் அலையின்போது கிராமங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் எடுத்துச் செல்வது மிகுந்த சவாலாக இருந்தது என்றும், முப்படையினர், ரயில்வே ஊழியர்கள், டேங்கர் லாரிகளின் ஓட்டுநர்கள் போர்கால அடிப்படையில் செயல்பட்டு, அந்த சவாலை முறியடித்தனர் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்த வானொலி உரையின்போது உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆக்சிஜன் டேங்கர் லாரி ஓட்டுநரிடம் பேசிய பிரதமர், இக்கட்டான தருணத்தில் அவரது பணி எவ்வளவு சவாலானதாக இருந்தது என்பதையும் கேட்டறிந்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாட்டின் வேளாண் உற்பத்தி பெருகி இருக்கிறது என்றும், பல மாநிலங்களில் விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்