Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட்  பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சென்று கொரோனா நோயாளிகளிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து இம்மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்குச் சென்ற அவர் இறுதியாக கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சென்று கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். 

image

தொடர்ந்து கோவை மாநகராட்சியில் ஒரு மண்டலத்திற்கு 10 கார் ஆம்புலன்ஸ்கள் வீதம் 5 மண்டலங்களுக்கும் சேர்த்து 50 கார் ஆம்புலன்ஸ்கள் சேவையை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்