தமிழகத்தில் நாளைமுதல் ஒரு வாரத்திற்கு தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை பொதுமக்களுக்கு வாகனங்கள்மூலம் காய்கறிகள், பழங்கள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளைமுதல் ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து முன்னதாக வெளியான செய்திக்குறிப்பில் காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரை காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நாளைமுதல் ஒரு வாரத்திற்கு தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை பொதுமக்களுக்கு வாகனங்கள்மூலம் காய்கறிகள், பழங்கள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கில் கடைகள் மூடலால் 4,380 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,சென்னையில் 1,610 வாகனங்கள் மூலம் தினமும் 1,160 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,770 வாகனங்கள் மூலம் 2,228 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்