Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மதுரை கிராமங்களில் காய்ச்சலைக் கண்டறிய 650 களப்பணியாளர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி தகவல்

மதுரையில் கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று காய்ச்சலைக் கண்டறிய 650 களப்பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ”கிராமப்புறங்களில் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்களை கொரோனா சிறப்பு ஆம்புலன்ஸ்களாக மாற்றி பயன்படுத்த வேண்டும்” என்றார்.

மதுரையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் மதுரை வழங்கினார். 

image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, "மதுரையில் கொரோனா தொற்று நகர்புறத்துக்கு இணையாக கிராமப்புறங்களில் பரவி வருகிறது. ஆகவே கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று பல்ஸ் ஆக்ஸ் மீட்டரை கொண்டு காய்ச்சலை கண்டறிய 650 களப்பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். 650 பேரும் ஒரு கிராமத்திற்கு வாரம் இரு முறை சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிய உள்ளனர்.

இதில், முதல் கட்டமாக மேலூர், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகள் முழுவதும் வீடு வீடாக சென்று காய்ச்சலை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 650 பேருக்கும் தேவையான பல்ஸ் ஆக்ஸ் மீட்டர் வாங்குவதற்கு 5 லட்சம் நிதியுதவி எனது தொகுதி நிதியில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது. ஒரிரு நாட்களில் காய்ச்சலை கண்டறியும் பணிகள் தொடங்கும்.

கொரோனாவை ஒழிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சியினர் அரசியல் இல்லாமல் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கேட்கிறோம். நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் ஆம்புலன்ஸ், செவிலியர்கள், முழு கவச உடை ஆகியவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள 50 அம்புலன்ஸ்களை பொது சேவைக்காக மாவட்ட நிர்வாகம் கொரோனா சிறப்பு ஆம்புலன்ஸ்களாக மாற்றி பயன்படுத்த வேண்டும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்