Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: முதல்வர் கோவை ஆய்வு | ஊரடங்கு நீட்டிப்பா? | அதிகரிக்கும் வெப்பநிலை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆய்வு செய்யவுள்ளார். தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிகிறார்.

மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது புகார்: சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவர்கள் புகார் அளித்ததின்பேரில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் புகார்: சென்னையில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டவரை 5 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ராஜகோபாலனின் தவறுக்கு ஆதாரம் உள்ளது: பாலியல் புகாரில் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உறுதியளித்துள்ளார். மேலும், ஆசிரியர் ராஜகோபாலன் தவறு செய்ததற்கு ஆதாரம் உள்ளதாகவும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தப்பட்ட மாஸ்க், கையுறை மறுவிற்பனை: மத்திய பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டு குப்பையில் வீசப்பட்ட கவச உடை, முகக்கவசங்களை கழுவி மறுவிற்பனை செய்யப்பட்டது அம்பலமானது.

8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி கூட்டம்: 8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூடியது. தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு வரி விலக்கு கோர மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பா? - விரைவில் அறிவிப்பு: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை - இன்று ஆலோசனை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்த தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தேங்கிய நீரை வெளியேற்றக் கோரிக்கை: மழை நின்றதால், கன்னியாகுமரியில் முக்கிய அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

30 நாட்கள் பரோலில் வந்தார் பேரறிவாளன்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து, அவருக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின்றி இறந்ததாக புகார் இல்லை - நீதிமன்றம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து, சிகிச்சை இல்லாமல் யாரும் இறந்ததாக புகார் இல்லை எனக்கூறி, கொரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை வழங்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஒரே நாளில் 3.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தமிழகத்தில் ஒரேநாளில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இளைஞர்களில் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

'சாப்பாட்டு ராமன்' கைது செய்யப்பட்டு விடுவிப்பு: முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்த புகாரில், சாப்பாட்டு ராமன் என்றழைக்கப்படும் பொற்செழியன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

13 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்