Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பைசர் தடுப்பூசியை ஒருமாதம் வரை ஃப்ரிட்ஜில் சேமித்து விநியோகிக்க அமெரிக்கா அனுமதி

பைசர் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசி குப்பிகளை, ஒரு மாதம் வரையில் குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமித்துக் கொள்ள அமெரிக்காவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியிருக்கும் அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம், ‘பைசர் நிறுவனம் அளித்திருக்கும் சமீபத்திய தரவுகளின்படி இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளது. சேமிக்கும்போது, குளிர்சாதனபெட்டியில் 2 – 8 டிகிரி செல்சியஸ் (அதாவது 35 – 46 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுகோலில் சேமித்தால் மட்டுமே ஒருமாதம் வரை தடுப்பூசியை சேமிக்கலாம் என அந்நிறுவனம் தெரித்துள்ளது.

image

முன்னராக இந்த பைசர் தடுப்பூசி குப்பிகள், மேற்குறிப்பிட்ட வெப்பநிலையில் ஐந்து நாள்கள் வரையே சேமித்துவைக்கப்படலாம் என்றிருந்தது. அந்த கால அவகாசம், இப்போது ஒருமாதம் என நீடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் மார்க்ஸ் பேசுகையில், “இந்த கால அவகாச நீட்டிப்பு காரணமாக, தடுப்பூசி வழங்கும் / விநியோகிக்கும் நபர்கள் போதுமான அளவு இருப்பை நீண்ட காலத்துக்கு உறுதிசெய்துக்கொள்ளலாம். நீண்ட கால இருப்பு காரணமாக, முன்பைவிடவும் அதிக மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகும். இது, அமெரிக்காவின் பலதரப்பட்ட மக்களும் தடுப்பூசி பெற வழிவகுக்கும்” எனக்கூறியுள்ளார்.

பைசரின் இந்த சேமிப்பு குறித்து ஐரோப்பிய மருந்து கழகமும் வரவேற்து ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதமே பைசரின் இந்த கால அவகாசத்தை 5 நாட்களில் இருந்து 2 வாரம் என அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்