Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; சட்டப்பேரவை குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வாகிறார்

திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித்தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்படும் மு.க.ஸ்டாலின், வரும் 7 ஆம்தேதி முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.

கொரோனா பரவலால், ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தார். முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கூட்டணிக் கட்சித்தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் பரப்புரையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் அளித்த 7 உறுதிமொழிகளை முதலில் நிறைவேற்ற ஸ்டாலின் ஆயத்தம் ஆகிவருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்