Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிறுசேமிப்பு பணத்தை கொரோனா நிதியாக தந்த சிறுவன்: சைக்கிள் பரிசளித்த முதலமைச்சர் ஸ்டாலின்

சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய சிறுவனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ, தீபா தம்பதியின் 7 வயது மகன் ஹரீஸ்வர்மன். சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக, சிறுக பணம் சேமித்து வந்துள்ளார். கொரோனாவால் ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பித்திருக்கும் நிலையில், நோயை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினர் ரொக்கமாகவும், மருத்துவப் பொருட்களாகவும் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதை அறிந்த சிறுவன் ஹரீஸ்வர்மன், சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிறு தொகை என்றாலும், சமூகத்தின் மீதான சிறுவனின் அக்கறை கண்டு நெகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹரீஸ்வர்மனை வெகுவாக பாராட்டினார். அத்துடன் நின்றுவிடாமல், சிறுவனின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் வகையில், புதிய சைக்கிள் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த சைக்கிளை மதுரை வடக்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி நேரில் சென்று சிறுவனிடம் வழங்கினார். அப்போது செல்போனில் சிறுவனை தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது கொரோனா காலம் என்பதால், சைக்கிளை வெளியே ஓட்டிச் செல்ல வேண்டாம் எனவும், படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறினார்.

சிறுவன் ஹரீஸ்வர்மனின் சமூக அக்கறையை பாராட்டி சைக்கிள் வாங்கி கொடுத்ததுடன் தொலைபேசியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்